மாற்றாந்தாய் கவனிப்பில் வௌிவாரி பட்டதாரிகள்

தற்போதைய அரசாங்கம் வௌிவாரி பட்டதாரிகளுக்கு மாற்றாந்தாய் கவனிப்பை வழங்குவதால் அவர்களுடைய நியமனம் பெறுவதற்கான வயது கடந்த செல்கிறது என்று எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

தொழில் எதிர்பார்த்துள்ள அனைத்து பட்டதாரிகளுக்கும் தொழில் வாய்ப்பை வழங்குவதற்கான தேசிய கொள்கையை உருவாக்க அரசாங்கம் தவறியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள எதிர்காட்சித் தலைவர், புதிய தொழில்வாய்ப்புக்களை உருவாக்கி வழங்குவதாக உறுதியளித்து அதிகாரத்திற்கு வந்தபோதும் கடந்த நான்கரை வருடங்களில் சுமார் நான்கு இலட்சம் தொழில்வாய்ப்புக்களை இல்லாதொழித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

அதாவது வருடத்துக்கு ஒரு இலட்சம் என்ற வகையில் இந்நாட்டு பிள்ளைகளுக்கான தொழில்வாய்ப்புக்களை இவ்வரசாங்கம் இல்லாதொழித்துள்ளது. அரசாங்கம் தௌிவான நிலையான திட்டத்தை செயற்படுத்த தவறியமையினால் பட்டதாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அரசாங்கம் பட்டதாரிகளுக்கான தொழில்வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்திருக்குமேயானால் தொழிலின்மை பிரச்சினை குறைந்து பட்டதாரிகளுடைய பிரச்சினை குறைந்திருக்கும் என்றும் எதிர்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள் (1)

  1. எனது பெயர் ஜெயகுமார் ரூபினி. வயது 31 வருடங்கள். நான் கடந்த 2014 ஒக்ரோபர் மாதம் 6ஆம் திகதி எனது வெளிவாரி பட்டப்படிப்பினை பூர்த்தி செய்துள்ளேன். எனினும் தற்போது 5வருடங்கள் கடந்தும் இதுவரையும் வேலையற்ற பட்டதாரியாகவே உள்ளேன். நாங்கள் பல்கலைக்கழக அனுமதி பெற தகுதி இருந்தும் (A/L 2007 A,B,C 1.0019zcore) புறக்கணிக்கப்பட்டதால் குறித்த வெளிவாரி பட்டப்படிப்பினை மேற்கொண்டோம். எனினும் தற்போதைய நியமனம் வழங்கலிலும் புறக்கணிக்கப்பட்டமையானது, மிகவும் வேதனை அளிக்கின்றது.

    (1)(0)

Leave a Reply to ஜெ.ரூபினி

Cencel

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435