நாட்டில் நேற்று 124 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானது.
மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை கொத்தணியில் நேற்று 121 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானது.
அவர்களில் தனிமைப்படுத்தலில் இருந்த 87 பேருக்கும், முன்னதாக கொரோனா தொற்று உறுதியானவர்களுடன் தொடர்புடைய 34 பேருக்கும் கொவிட்-19 தொற்று உறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன், குவைத்தில் இருந்து நாடுதிரும்பிய இருவருக்கும் ஓமானில் இருந்து நாடு திரும்பிய ஒருவருக்கும் நேற்று கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
இதற்கமைய மினுவாங்கொடை கொத்தணியில் இதுவரையில் ஆயிரத்து 307 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.
இந்தநிலையில் நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 752 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து இதுவரையில் 3,307 பேர் குணமடைந்துள்ளனர்.
தொற்று உறுதியான 1,432 பேர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.