கடந்த 2015ம் ஆண்டு இலங்கை மின்சார சபை ஊழியர்களின் சம்பள உயர்வில் ஏற்பட்ட பிரச்சினைக்கு
இன்னும் தீர்வு காணப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி அதன் ஊழியர்கள் பெப்ரவரி மூன்றாம் திகதியை எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்தியுள்ளனர்.
குறித்த பிரச்சினை தொடர்பில் கடந்த ஜனவரி 31ம் திகதி அமைச்சில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாக மின்சாரசபை ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து இலங்கை மின்சாரசபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு மேற்கொண்ட தீர்மானத்திற்கமைய அனைத்து மின்உற்பத்தி நிலையங்கள், நுகர்வோர் சேவை மத்திய நிலையம், அலுவலகம் சபையுடன் தொடர்புபட்ட ஏனைய அலுவலக ஊழியர்கள் அனைவரும் நாளை நன்பகல்12 மணிக்கு இலங்கை மின்சாரசபை முன்பாக நடைபெறும் எதிர்ப்பு நடவடிக்கையில் கலந்துகொள்ளுமாறு தொழிற்சங்கம் நேற்று (01) வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.