மின்சார கொள்வனவு விரைவுபடுத்தப்படாவிடின் மின்வெட்டு

நிலக்கரி மின் உற்பத்தியை ஊக்குவிக்க அரசாங்கம் முயற்சிகளில் அரசாங்கம் இறங்கியுள்ள நிலையில், மின்சார கொள்வனவை விரைவுபடுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த மாதத்திற்குள் மின்வெட்டு தவிர்க்க முடியாது என்று இலங்கை மின்சாரசபை பொறியிலாளர்கள் சங்கம் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை மின்சாரசபை பொறியிலாளர்கள் சங்கம் இந்நிலை குறித்து மின் மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அலுத்தகமகே மற்றும் மின்சாரசபை நிர்வாகம் என்பவற்றுக்கு தெரியப்படுத்தியுள்ளது.

இன்னும் ஒருவருட காலத்திற்கான மின்கொள்வனவை ஊக்கப்படுத்துவதே பொறியிலாளர் சங்கத்தின் நோக்கமாகும். மழை வீழ்ச்சி குறைவடைந்தமை, விவசாய நோக்கங்களுக்காக நீரை சேமித்தல் தொடர்பில் மகாவெலி, வேளாண்மை அதிகாரிகளிடமிருந்து வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் என்பவற்றின் காரணமாக நீர் மின் உற்பத்தி குறைவடைவதால் அடுத்த மாதம் (March) தொடக்கத்தில் இருந்து திட்டமிடப்பட்ட மின்வெட்டு அமுல்படுத்தவேண்டிய அவசியம் ஏற்படும் என்று அத்தொழிற்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அடுத்த மாதத்திற்குள் பாராளுமன்றம் கலைக்கப்படும். அரசாங்கம் இல்லாமல் ஏலமெடுப்பது கடினம் என்று அத்தொழிற்சங்கத்தின் தலைவர் அனுருத்த திலகரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

200 மெகாவாட் துணை மின்சாரம் வழங்குவதற்கு ஏற்கனவே ஏலம் எடுக்கப்பட்டுள்ள போதிலும் அதற்கான ஒப்புதல் இன்னும் வழங்கப்படவில்லை. “குறைந்தபட்சம் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் ஒப்புதல் வழங்கப்பட்டால், நாங்கள் நிலைமையை நிர்வகிக்க முடியும், இல்லையென்றால் மின்வெட்டுக்கு நாங்கள் செல்ல வேண்டியிருக்கும்,” என்றும் கூறியுள்ளார்.

200 மெகாவாட் துணைக்கான திட்டம் மதிப்பீட்டில் உள்ளது, ஆனால் ஒப்புதல் அளிக்கப்பட்டால், அது செயல்படுத்த ஒரு மாதம் ஆகும். கொள்முதல் ஒரு வருடமாக இருக்கும் என்றும் 30 மாதங்களுக்கு நீட்டிக்கப்படலாம். இந்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கவில்லை என்றால் அவர்கள் சர்வதேச ஏலங்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டியிருக்கும் என்று மின் மற்றும் எரிசக்தி அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நுரைச்சோலை மற்றும் திருகோணமலை ஆகிய பிரதேசங்களில், இரண்டு நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களை நிறுவும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளநிலையில், மத்தியில் இந்த நடவடிக்கைகள் வந்துள்ளனமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435