நாட்டில் மீண்டும் தனியார் மருத்துவமனை நிறுவப்படுகிறதா என்பது தொடர்பில் ஆராய்வதற்கு ஐந்து பேர் கொண்ட குழுவை இலங்கை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா ராவய பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் வடக்கு கொழும்பு மற்றும் சைட்டம் ஆகிய தனியார் மருத்துவப் பல்கலைக்கழங்கள் அமைக்க முற்பட்டதன் காரணமாக மாணவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் மீண்டும் ஒரு தனியார் மருத்துவக் கல்வி தொடர்பில் மீண்டும் பேச்சுக்கள் எழுந்துள்ளன என்று இதன்போது உதவிச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில்உயர்கல்வியமைச்சர் பந்துல குணவர்தனவிடம் வினவியபோது தனியார் மருத்துவக் கற்கை, தனியார் மருத்துவக் கல்லூரியை தொடங்குவதற்கு அரசாங்கம் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை என்று தெரிவித்தார் என்று ராவய பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது.