மழையுடன் கூடிய காலநிலை காரணமாக இன்று (30) காலை 6.00 மணி தொடக்கம் நாளை (31) காலை 8.00 மணி வரையான 26 மணி நேரம் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் என்று அனர்த்த முகாமைத்துவ மத்தியநிலையம் மீனவர்களை எச்சரித்துள்ளது.
மன்னார் தொடக்கம் புத்தளம் வரையிலும் கொழும்பு, மாத்தறை, அம்பாந்தோட்டை தொடக்கம் மட்டக்களப்பு வரையிலுமான கரையோர பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 70 – 80 காணப்படுவதுடன் அலையின் வேகம் அதிகரிக்கும் சாத்தியங்கள் காணப்படும் என தாம் எதிர்பார்ப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இதேபோல் நாட்டின் ஏனைய கரையோர பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 60 – 70 கிலோமீற்றர் வரை காணப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளமையினால் பொது மக்கள் கடலுக்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.