மீன் இறக்குமதி வடமேல் மாகாண மீன் பிடியை பாதிக்கிறது

தாய்வான், மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து பாவனைக்கு பொருத்தமற்ற மீன்களை இறக்குமதி செய்வதனால் இலங்கையின் வடமேல் மாகாண மீன்பிடித்துறைக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று சிலாபம் மாவட்ட மீனவர் சங்கம் அறிவித்துள்ளது.

மேற்கூறப்பட்ட நாடுகளில் இருந்த இறக்குமதி செய்யும் தரமற்ற மீன்கள் சிலாபம் பிரதான மீன் சந்தையினூடாக நாட்டின் ஏனைய பாகங்களுக்கு விநியோகிக்கப்படுவதாகவும் இதனால் சிலாபம் மீன் தொடர்பில் நாட்டு மக்கள் மத்தியில் நல்லபிப்பிராயம் இல்லாமல் போயுள்ளது என்றும் சிலாபம் மீனவச் சங்கத்தின் தலைவர் ரோஷன் பிரனாந்து பி.பி.ஸியின் சிங்களச் சேவைக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு பெருந்தொகையான மீன்கள் நாட்டில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் தான் அறிந்துக்கொண்டுள்ளதாகவும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சுகாதாரப் பிரச்சினை

இந்நிலை தொடர்ந்தால் இலங்கை மீனை நுகர்வோரின் எண்ணிக்கை குறையும் என்றும் சிலாபம் சந்தையில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள சில மீன் தொகைகளில் காலாவதியாகும் தினமும் உற்பத்தி செய்த தினமும் பொறிக்கப்பட்டில்லை என்பதை தான் நேரில் கண்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த மீன்களை சாப்பிடும் மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும். மீன் இறக்குமதியை தடை செய்யுமாறு நாம் அரசிடம் எமது சங்கம் அரசிடம் கோரியுள்ளது. ஐரோப்பிய மீன் ஏற்றுமதி தடையை நீக்க கடும் முயற்சிகளை மேற்கொண்டனர். அத்தடையை நீக்கிக்கொள்ளும் தருணத்தில் அதை விடவும் இரண்டு மூன்று மடங்கும் மீன் நாட்டில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கலந்துரையாடுவதாக மாகாண அமைச்சர் தெரிவித்தார் என்றும் அவர் தெரிவித்தார்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435