இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் கொழும்பு மாவட்ட வௌிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலைய பிரதிநிதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நிகழ்வொன்று நேற்று (31) பணியக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
இதன்போது புதிய முகவர்நிலைய பிரதிநிதிகளுக்கான தீர்வு நடவடிக்கை, அனுமதிவழங்கல், பணியக கணனித்தொகுதியை கையாள்தல் போன்ற விடயங்கள் குறித்த தௌிவுபடுத்தப்பட்டது.
இதன்போது முகவர் நிலைய பிரதிநிதிகள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து பணியகத்திற்கு தௌிவுபடுத்தினர். புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வினைத்திறன் மிக்க, சலுகையடிப்படையிலான சேவையினை வழங்குவது குறித்த ஆலோசனைகளும் பணியகம் வழங்கியது.
இந்நிகழ்வின் போது பணியகத்தின் தலைவர் கமல் ரத்வத்த, பொது முகாமையாளர் டப்ளியு.எம்.வி. வன்சேக்கர, மேலதிக பொது முகாமையாளர் (காரியாலய நடவடிக்கை) டி.டி.பீ சேனாநாயக்க, பிரதி பொது முகாமையாளர் (சட்டம்) கீர்த்தி முதுகுமாரன உட்பட பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.