முக்கியமான 2 தினங்களில் போராட்டத்தில் ஈடுபடவுள்ள ரயில்வே சங்கங்கள்

ரயில்வே பதவிகளின் தரங்களில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறுகோரி ரயில் இயந்திர சாரதிகள், ரயில் நிலைய அதிபர்கள் உட்பட சில சங்கங்கள் இரண்டு நாட்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளன.

நத்தார் பண்டிகையின் பின்னர் 26ஆம், 27ஆம் திகதிகளில் இந்தப் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் லால் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள், சாரதிகள், ரயில் நிலைய அதிபர்கள் ஆகியோருக்கு தாக்கம் செலுத்தியுள்ள பதவிநிலை தரங்களில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய கடந்த மே மாதம் அமைச்சரவை பத்திரத்தின் ஊடாக அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டது.

எனினும், தரநிiலைகளுக்கு அமைய வேதன நிர்ணயம் மேற்கொள்ளும்போது ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக, அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் அது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.

ஆனால், தற்போது 4 மாதங்கள் கடந்துள்ளநிலையிலும், குறித்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு வலியுறுத்தி, பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435