முடிவுக்கு வரவுள்ள கல்விசாரா ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு

கடந்த 34 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த பணிப்புறக்கணிப்பை முடிவுக்குக்கொண்டுவர பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தீர்மானித்துள்ளனர்.

மாதாந்த நிலுவைக் கொடுப்பனவு உட்பட 6 கோரிக்கைகளை முன்வைத்து அவர்களின் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கல்விசாரா ஊழியர்கள் போராட்டம் காரணமாக அனைத்து பல்கலைக்கழகங்களினதும் பரீட்சைகள் மற்றும் ஏனைய சகல நாளாந்த நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கல்விசாரா ஊழியர்களுக்கும், உயர்கல்வி அமைச்சர் கபீர் ஹாசிமிற்கும் இடையில் நேற்று பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றது.

அந்த பேச்சு வார்த்தையினை அடுத்து நாளை (04) முதல் தமது போராட்டத்தை கைவிட தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் தொழிற்சங்க ஒன்றியத்தின் இணைத் தலைவர் எட்வட் மல்வத்தகே தெரிவித்துள்ளார்.

கல்வி சாரா ஊழியர்கள் விடுமுறைத் தினங்களில் பணியாற்றுவதற்கான கொடுப்பனவை 10 வீதத்தால் அதிகரிப்பதற்கு அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த தீர்மானம் தொடர்பில் சுற்று நிரூபம் வெளியிடப்படும் வரை தமது தொழிற்சங்க போராட்டம் தொடரும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், நாளைய தினத்திற்குள் சுற்றுநிரூபத்தை வெளியிடுவதற்கு அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளதாக கூறியுள்ள அவர், ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழு ஒன்றை நியமிக்க அமைச்சர் இணக்கம் வெளியிட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் தொழிற்சங்க ஒன்றியத்தின் இணைத் தலைவர் எட்வட் மல்வத்தகே தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435