முதற்கட்டமாக 1700 கிழக்கு பட்டதாரிகளுக்கு நியமனம்

கிழக்கு மாகாணத்தில் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் நடவடிக்கையில் முதற்கட்டமாக ஆயிரத்து 700 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன

இவர்களுக்கான நியமனங்கள் எதிர்வரும் வாரங்களில் வழங்கப்படும் எனவும் கிழக்கு மாகாண சபையின் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

கிழக்கு முதலமைச்சர் நசீர் அஹமட்டினால் பட்டதாரிகளுக்கான நியமனங்கள் விரைவில் வழங்கப்படவுள்ளன என்று அண்மையில் கூறியிருந்த நிலையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது..

அத்துடன் ஏனைய பட்டதாரிகளுக்கான நியமனங்கள் கட்டம் கட்டமாக வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான நடவடிக்கைகளும் தற்போது இடம்பெற்றுவருவதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இதனடிப்படையில் ஏனைய 3080 பட்டதாரிகளுக்கான நியமனங்களுக்கான போட்டிப் பரீட்சைகள் அடுத்த மாதம் முதலாம் வாரமளவில் இ்டம்பெறலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

கிழக்கின் நான்காயிரத்து 784 ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை நியமிப்பதற்கு அண்மையில் தேசிய முகாமைத்துவ திணைக்களம் அனுமதி வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

நன்றி- தமிழ் சிஎன்என்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435