முதல் ஆறு மாதங்களில் 95,908 இலங்கையர் தொழில்நாடி வௌிநாடுகளுக்கு

கடந்த 6 மாத காலத்திற்குள் 95,908 பேர் வௌிநாட்டு வேலைவாய்ப்பு நாடி சென்றுள்ளனர். அவர்களில் 56.526 பேர் ஆண்களாவர். இத்தொகையானது வௌிநாடு சென்றவர்களின் எண்ணிக்கையில் நூற்றுக்கு 59 சதவீதமாகும் என்று இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

அதிக எண்ணிக்கையான ஆண் தொழிலாளர்கள் கட்டார் நாட்டிற்கே தொழில்நாடி சென்றுள்ளனர். அவ்வெண்ணிக்கையானது16,626 ஆகும்.

இவ்வாண்டு ஜனவரி தொடக்கம் ஜூன் வரையான காலப்பகுதியில் 39,382 பெண்கள் வௌிநாடுகளுக்கு தொழில் நாடி சென்றுள்ளனர். அவ்வெண்ணிக்கையானது நூற்றுக்கு 41 வீதமாகும். சுமார் 14,948 பேர் குவைத்திற்கு சென்றுள்ளனர்.

இவ்வாண்டில் மட்டும் குவைத்திற்கு 20,601 பேரும் கட்டாருக்கு 19,026பேரும் சவுதி அரேபியாவிற்கு 16,747 பேரும் தொழில்நாடி சென்றுள்ளனர்.

மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களினால் நடத்தப்படும் சுரக்‌ஷா பாதுகாப்பு இல்லங்களில் தங்கவைக்கப்பட்டிருந்த சுமார் 858 பேர் இம்மாதம் 11ம் திகதி பணியகத்தினால் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களில் அதிக எண்ணிக்கையானவர்கள் குவைத்தில் பணிநாடி சென்றவர்களாவர். சிக்கல்களை தீர்க்கும் வரை மேலும் 146 பேர் அவ்வில்லங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435