முதியோர் பராமரிப்பாளர்களை பயிற்றுவிப்பதற்கான வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க முதியோர் செயலகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
சுகாதார அமைச்சுடன் இணைந்து ஆரம்பிக்கப்படவுள்ள இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 20 பேர் பயிற்றுவிக்கப்படவுள்ளனர்.
பயிற்சியை நிறைவு செய்தோருக்கான தேசிய நிபுணத்துவ பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும் என்று செயலகத்தின் பணிப்பாளர் சுமிந்த சிங்கப்புலி தெரிவித்தார்.
நாட்டில் அதிகரித்துவரும் முதியோரை பராமரிக்க இத்திட்டம் உதவியாக இருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
வேலைத்தளம்