முறைசாரா பிரிவில் பணியாற்றும் தொழிலாளர்களை ஒன்றிணைக்கும் நிகழ்வு அண்மையில் புத்தளம் நகரை மையப்படுத்தி முன்னெடுக்கப்பட்டது.
இதற்கமைய, புத்தளம் முல்லிப்புரம் கிராமிய மீனவர்கள் சங்கம் மற்றும் புத்தளம் மூட்டைத் தூக்குவோர் சங்கம் ஆகியோருடன் முறையற்ற பொருளாதாரம் மற்றும் தொழிற்சங்கம் ஒன்றை கட்டியெழுப்புவதன் முக்கியத்துவம் என்பவை குறித்து நீண்ட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
குறித்த மீனவர்கள் சங்கத்தில் சுமார் 150 அங்கத்தவர்கள் உள்ளனர். தமக்குள்ள மீன்பிடி வலை, படகு என்ஜின் பற்றாக்குறை உட்பட பல பிரச்சினைகளுக்கு மத்தியில் மிக கஷ்டத்துடன் தொழிலை முன்னெடுப்பதாகவும் தமது பிரச்சினை குறித்து மீன்பிடித்துறை அமைச்சு மற்றும் துறைசார் அதிகாரிகளுக்கு தௌிவுபடுத்தியபோதும் இதுவரை சாதகமாக பதில்கள் கிடைக்கவில்லை என்று மீனவர் சங்கத்தினர் தெரிவித்தனர்.
தற்போது செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் உள்ள மூட்டைத் தூக்குவோர் சங்கம் 20 வருடகால வரலாற்றைக் கொண்டது. சுமார் 50 பேர் மூட்டைத் தூக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பிரச்சினைகளுக்கும் கஷ்டங்களுக்கும் மத்தியிலேயே எமது அன்றாட தொழில் முன்னெடுக்கப்படுகிறது. தமது தொழிலை முன்னெடுக்கும் போது அன்றாடம் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கவேண்டி வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
குறித்த சங்கம் எதிர்காலத்தில் சொலிடாரிட்டி நிறுவனம் மற்றும் ப்ரொடெக் தொழிற்சங்கம் என்பவற்றுடன் இணைந்து செயற்படவும் தொழிற்சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் முறைசாரா பிரிவு தொழிலாளர்களுக்கு ஊழியர் நம்பிக்கை நிதியத்தை பெற்றுக்கொடுப்பது மற்றும் அதனால் பெறும் நன்மைகள் என்பவை குறித்தும் இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.
கல்ப்ப மதுரங்க- வேலைத்தளம்