மூவாயிரம் வடக்கு பட்டதாரிகளுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்

வடக்கு உள்ளூராட்சி மன்றங்களில் ஆளணி உருவாக்கம் ஏற்படுமாயின் 300 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பினை பெற முடியும் என்று அகில இலங்கை அராசங்க பொது ஊழியர் தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி கூட்டுறவாளர் சங்க மண்டபத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இவ்வாறு கருத்து வௌியிடப்பட்டது.

வடக்கில் கடந்த 20 வருடங்களாக ஊழியர்கள் ஆளணி உருவாக்கம் மேற்கொள்ளப்படவில்லை. எனவே கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் மேற்கொள்ளபட்ட சனத்தொகையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஆளணியே தற்போதும் காணப்படுகிறது.

ஏற்கனவே உள்ள ஊழியர்களின் சம்பள முரண்பாடு இன்னும் தீர்க்கப்படவில்லை. பதவியுயர்கள் வழங்கப்படவில்லை. வெற்றிடங்கள் நிரப்பப்படவில்லை.

வட மாகாண உள்ளூராட்சி அமைச்சர் என்றவகையில் முதலமைச்சர் கவனத்திற்கு குறித்த விடயம் தொடர்பில் தெரியப்படுத்தியபோதிலும் இது வரை உரிய தீர்வு எட்டப்படவில்லை.

மாகாணசபையின் வினைத்திறனற்ற செயற்பாடுகளும் உள்ளூராட்சி திணைக்களத்தின் செயற்றிறனற்ற நிலைமையில் மிகுதியுள்ள 13 மாதங்களில் இப்பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படும் என்ற நம்பிக்கையை போக்கடிக்கிறது என்றும் அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435