மேன்பவர் ஊழியர்களின் தொழிற்பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தை வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாக தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் இராஜாங்க அமைச்சர் ரவீந்ர சமரவீர தெரிவித்துள்ளார்.
மேன் பவர் ஊழியர் பிரச்சினை இன்று நேற்றைய பிரச்சினையல்ல. நீண்ட நாட்களாக காணப்படும் பிரச்சினை. அந்த ஊழியர்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்று கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதற்கமைய அனைத்து மேன் பவர் நிறுவனங்களும் அவர்களுடைய ஊழியர்களுக்கு ஊழியர் நம்பிக்கை நிதியம் மற்றும் சேம லாப நிதியம் என்பவற்றை பெற்றுகொடுத்து உரிய வரப்பிரசாதங்களை பெற்றுக்கொடுப்பது கட்டாயமாகும்.
மேலும் தொழில் திணைக்களத்தில் பதிவு செய்யுவும். தனியார் நிறுவனங்களில் சுமார் 82 இலட்சம் பேர் வரை பணியாற்றுகின்றனர். அவர்களில் 22 இலட்சம் பேருக்கு மட்டுமே ஊழியர் சேமலாப நிதிய உரிமை கிடைத்துள்ளது. சுற்றி வளைப்புகளை மேற்கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு சுற்றி வளைப்பு அதிகாரிகள் போதியளவு இல்லை. வடக்கு கிழக்கு மாகாணங்களில் இந்நிலை தொடர்பில் ஆராயும் நிலை மிகவும் பலவீனமாக உள்ளது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.