மேன்முறையீட்டுச் சபையின் தீர்மானம் குறித்து ஆசிரியர்களுக்கு கடிதம்

கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் மேற்கொண்ட ஆசிரியர் இடமாற்றத்தை எதிர்த்து, மேன்முறையீடு செய்த ஆசிரியர்களுக்கு, மாகாண ஆசிரியர் இடமாற்ற மேன்முறையீட்டுச் சபையின் தீர்மானம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு, கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ. நிஸாமினால் தனியான கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இக்கடிதத்தின் பிரதிகள் வலயக் கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள், கணக்காளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மாகாண ஆசிரியர் இடமாற்றச் சபையின் 2016 தீர்மானத்திற்கமைவாக கடந்த ஏப்ரல் மாதம் மேற்கொள்ளப்பட்ட இடமாற்றத்தை எதிர்த்து தங்களால் மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீட்டினை பரிசீலித்த மாகாண இடமாற்ற மேன்முறையீட்டுச் சபையானது போதுமான, வலுவான காரணங்கள் காணப்படாமையினால் நிராகரித்துள்ளது.

சேவையின் தேவை கருதி, தங்களுக்கு இடமாற்றத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள பாடசாலையானது, பொருத்தமானதாக உள்ளனால், இடமாற்றக் கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ள குறித்த பாடசாலையில் உடனடியாக கடமைக்கு சமுகமளிக்கவும். இடமாற்றப் பாடசாலையில் கடமையேற்றமை தொடர்பில் குறித்த பாடசாலை அதிபர், சம்பந்தப்பட்ட வலயக் கல்விப் பணிப்­பாளர் ஊடாக அறிக்கையிடுவதுடன், மாகாண ஆசிரியர் இடமாற்ற மேன்முறையீட்டுச் சபையின் தீர்மானம் தொடர்பில் தங்களால் இதன் பின்னர் முன்வைக்கப்படும் எவ்வித முறையீடுகளும் கவனத்தில் கொள்ளப்பட மாட்டாது எனவும் மாகாண கல்விப் பணிப்பாளர் நிஸாம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, கடந்த ஏப்ரல் மாதம் இடமாற்றம் பெற்றுக் கொண்ட ஆசிரியர்கள் இன்னும் கடமையேற்றுக் கொள்ளாததனால், மாகாணத்திலுள்ள பல பாடசாலைகள் ஆளணி பற்றாக்குறையினால் மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆளணிப் பற்றாக்குறை காரணமாக சில பாடசாலைகள் மூடப்படும் அபாயத்தை எதிர் கொண்டுள்ளதாகவும் அதிபர்கள், கல்விப் பணிப்பாளர்கள் குறிப்­பிட்டுள்ளனர்.

இவ்வாறான நிலையில், ஆசிரியர்கள் புதிய இடமாற்றப் பாடசாலைகளில் கடமையேற்காது, தொடர்ந்தும் முன்னைய பாடசாலைகளில் இருந்து கொண்டு சம்பளம் பெற்று வருகின்றனர். இச்செயல் பெற்றோர் மத்தியில் பலத்த விசனம், விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435