மேலதிக ஊழியர்களால் விழிபிதுங்கும் கடற்றொழில் கூட்டுத்தாபனம்

கடற்றொழில் கூட்டுத்தாபத்தில் பணியாற்றும் ஊழியர்களும் சம்பளம் வழங்கக்கூட நிதியில்லாத நிலையில் அவர்கள் சுய விருப்பின் கீழ் ஓய்வுப் பெறலாம் என்றும் அவர்களுக்கான நட்டஈடு வழங்கப்படும் என்றும் கடற்றொழில் நீரியல் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கூட்டுத்தாபனத்தின் நிலை குறித்து கடந்த வாரம் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்​டே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சிக்காலத்தில் தேவைக்கு அதிகமாக ஊழியர்களை பணியில் இணைத்துக்கொண்டமையே இதற்கு முக்கிய காரணமாகும். 745 ஊழியர்களின் சேவையே கூட்டுத்தாபனத்திற்கு தேவைப்படுகிறது. எனினும் கடந்த ஆட்சிக்காலத்தில் 1200 பேர் பணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். இதனால் மேலதிகமாக 455 ஊழியர்கள் உள்ளனர். எனவே சம்பளம் வழங்குவதில் பாரிய சவால் ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் திரைசேரியில் இருந்து 650 மில்லியன் ரூபா பெறப்பட்ட சம்பளம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து செய்ய முடியாத காரணத்தினால் நிலைமையை தொழிற்சங்கங்களுக்கு சுட்டிகாட்டினோம். கூட்டுத்தாபனத்தை மூடவேண்டிய அபாயம் தோன்றியுள்ளதையும் விளக்கப்படுத்தினோம். இதனையடுத்து அவர்கள் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டனர்.

இந்நிலை காரணமாகவே இச்செயற்பாட்டுக்கு அனுமதி பெறுவதற்காக அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கவுள்ளேன்.

கடந்த ஆட்சிக்காலத்தில் அரச நிறுவனங்கள் தனியார் மயப்படுத்தப்படாவிடினும் தேவைக்கு அதிகமாக ஊழியர்களை இணைத்துக்கொண்டுள்ளனர். இலங்கை போக்குவரத்துசபையில் ஒரு பஸ்ஸுக்கு 6 சாரதி என்ற வீதத்தில் ஊழியர்கள் உள்ளனர். இதனால் சம்பளம் வழங்க முடியாமல் இலங்கை போக்குவரத்துச்சபைக்கு சொந்தமான தலங்கம காணியை விற்பனை செய்யவேண்டியேற்பட்டது. இந்நிலை தொடர இடமளிக்க முடியாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

வேலைத்தளம்/ வீரகேசரி

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435