மேலும் 10,000 வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில்வாய்பை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது என கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று (19) காலை இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானத்தையடுத்து ஜனாதிபதி செயலகத்திலிருந்து வௌியேறும் போது அலுவலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பட்டதாரிகளை சந்தித்து இதனைத் தெரிவித்துள்ளார்.
நாம் அனைவருக்கும் தருவோம். அனைவருக்கும் கூறுங்கள். மேலும் பத்தாயிரம் பேருக்கு தொழில்வாய்ப்பை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. “வெயிலில் காயாமல் வீடுகளுக்குச் செல்லுங்கள என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
ஐம்பதாயிரம் வேலையில்லா பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளின் பெயர் விபரங்கள் கடந்த 17ம் திகதி வௌியிடப்பட்டது. அதில் இடம்பெறாத பட்டதாரிகள் ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.