மேல் மகாணத்தில் இருந்து வெளியேறியவர்களுக்கு14 நாட்களுக்கு தனிமைப்படுத்தல்

மேல்மாகாணத்தில் இருந்து ஒக்டோபர் 29ஆம் மற்றும் 30ஆம் திகதிகளில் வெளியேறி, வேறு பிரதேசங்களுக்கு சென்றவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அவர்கள் வெளியேறி தற்போது தங்கியுள்ள பகுதிகளில் வைத்து 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு ஊட்படுத்தப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த 29ஆம், 30ஆம் திகதிகளில் குளியாப்பிடிய மற்றும் மேல்மாகாணதத்தில் இருந்து வெளியேறியவர்களே இவ்வாறு 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

கடந்த 29ஆம் திகதி வியாழக்கிழமை நள்ளிரவு முதல் மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட இருந்த நிலையில், மேல் மாகாணத்திலிருந்து எவரும் வெளியேறி வேறு பிரதேசங்களுக்கு செல்ல வேண்டாமென ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதற்கு முன் பொலிஸார் மக்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

எனினும், தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைக்கு வருவதற்கு முன்னதாக மேல் மாகாணத்தில் இருந்த பெருந்தொகையாளோர் மேல் மாகாணத்திலிருந்து வெளியேறியுள்ளனர்

இவ்வாறு வெளியேறியவர்களை கண்டுபிடிப்பதற்கான விஷேட நடவடிக்கை நேற்று முதல் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435