மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகளில் சுமார் 300 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன என்று மாகாண கல்வித் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
குறித்த வெற்றிடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க தீர்மானித்துள்ள போதும் பயிற்சியற்றவர்கள் என்று கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கனிஷ்ட பிரிவுகளுக்கு இணைத்துகொள்ளப்படும் ஆசிரியர்களில் பெரும்பாலானவர்கள் கஷ்டப்பிரதேசங்களுக்கே நியமிக்கப்படுகின்றனர். இதனால் தான் ஆரம்ப பிரிவுகளில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.