குறைந்த வருமானம் பெறும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு இலட்சம் தொழில்வாய்ப்பை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாண மாவட்டத்தில் 26 ஆயிரத்து 66 பேர் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் நான்கு தினங்களுக்கு மாவட்டங்கள் தோறும் நேர்முகப் பரீட்சை இடம்பெறவிருப்பதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
நேர்முக பரீட்சைக்கு தோற்றுவோர் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் பின்வருமாறு,
1. தேசிய அடையாளஅட்டை
2. பிறப்பு அத்தாட்சிபாத்திரம்
3.வதிவிடச்சான்றிதழ்
4.குடும்ப பங்கீட்டு அட்டை.
5.பாடசாலை விடுகைப்பத்திரம்
6.கல்வித் தகமை சான்றிதழ்கள்
7.பிரதேச, மாகாண, தேசிய மட்ட விளையாட்டு சான்றிதழ்கள்
8.ஏனைய கல்வித் தகமை சான்றிதழ்கள்
இதற்கமைய யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள 15 செயலாளர் பரிவுகளிலில் இருந்து நேர்முக பரீட்சைக்கு தெரிவுசெய்யப்பட்ட எண்ணிக்கை மற்றும் அவர்களுக்கான நேர்முக பரீட்சைக்கான நேர அட்டவணை பின்வருமாறு:
மாவட்ட செயலகம் இலக்கம் நேரம்
நெடுந்தீவு 448 மு.ப. 9.00 – பி.ப 4.30
பருத்தித்துறை 784 மு.ப. 9.30 – பி.ப 4.30
வேலணை 869 மு.ப. 9.30 – பி.ப 4.00
யாழ்ப்பாணம் 632 மு.ப. 8.30 – பி.ப 4.30
நல்லூர் 1,967 மு.ப. 9.00 – பி.ப 4.00
சங்கானை 2,575 மு.ப. 8.30 – பி.ப 4.30
சண்டிலிப்பாய் 2,217 மு.ப. 8.30 – பி.ப 4.30
கோப்பாய் 3,394 மு.ப. 8.30 – பி.ப 5.00
காரைநகர் 628 மு.ப. 9.00 – பி.ப 4.30
உடுவில் 2,246 மு.ப. 8.30 – பி.ப 4.30
சாவகச்சேரி 3,331 மு.ப. 8.30 – பி.ப 4.30
தெல்லிப்பளை 1,673 மு.ப. 9.00 – பி.ப 4.30
கரவெட்டி 1,917 மு.ப. 9.00 – பி.ப 4.00
ஊர்காவற்துறை 2,262 மு.ப. 8.30 – பி.ப 3.30
மருதங்கேணி 1,129 மு.ப. 8.30 – பி.ப 4.30
மூலம் – News.lk