யாழ் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சம்மேளனத்தில் குழப்ப நிலை

யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தின் தலைவர் யார் நிர்வாகி யார் இது தொடர்பில் கூட்டுறவு திணைக்களம் நடவ­டிக்கை எடுக்குமா என கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கள் கேள்வியெழுப்பியுள்ளன.

வடமாகாண கடற்றொழில் இணையத்தின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர் சந்திப்பு யாழில் இடம்பெற்றது. இதன்போது கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகள் பின்வரும் விடயங்களினை முன்வைத்திருந்தனர்.

வடமாகாண கடற்றொழிலாளர்களை இணைத்து வடமாகாண கடற்தொழில் இணையம் பலதரப்பட்ட போராட்டங்களை கடற்தொழிலாளர்களின் நன்மைக்காக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்­களின் சமாசங்களின் சம்மேளனத்தில் தான்தோன்றித்தனமாக தலைவர் தான் எனக் கூறி ஏனைய சங்கங்கள் சமாசங்களின் அனுமதியில்லாது அறிக்கைகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

கடற்தொழில் செய்யாத ஒருவர் சங்கம், சமாசம் என அடிப்படையில் இல்லாது எவ்வாறு தலைவராக முடியும். இத்தகைய பொறுப்பை வழங்கியது யார் என பலதரப்பட்ட கேள்விகள் எழுந்துள்ளன. ஆகவே குறித்த தலைமைப் பொறுப்பு தொடர்பில் கூட்டுறவுத் திணைக்களம் இதுவரை நடவடிக்கை எடுக்காது இருப்பதற்குக் காரணம் என்ன? கடற்றொழிலாளர்களின் தேவைகளுக்காக ஒன்றுபட்டுச் செயற்படும் அமைப்பாகவுள்ள கடற்றொழிலாளர் இணையம் தொடர்பில் தேவையற்ற குற்றங்களைக் கூறுவதை விடுத்து கடற்றொழிலாளர் நன்மைக்காக ஒன்றுபடவேண்டும்.

மேலும் கடற்தொழிலாளர்களின் நலனில் அக்கறையுள்ளவர்கள் மற்றும் கூட்டுறவுத் திணைக்களம் என்பன யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாச சம்மேளனத்தின் தலைமை தொடர்பில் ஆக்கபூர்வ செயற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேலைத்தளம்/ நன்றி- வீரகேசரி- (எம்.நியூட்டன்)

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435