ரயில்வே திணைக்கள சொத்துக்களை சேதப்படுத்தினால் சட்ட நடவடிக்கை

ரயில் சேவையை பாதிக்கும் வகையில் செயற்பட்டால் பொதுச்சொத்து சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சட்டத்தின் நிறுத்துவதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.

பணிப்பகிஷ்கரிப்பின்றி சில தொழிற்சங்கங்கள் பணியில் ஈடுபட தீர்மானித்துள்ள நிலையில் அதனை தடுக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளனர் என தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக போக்குவரத்து அமைச்சின் ஊடகச் செயலாளர் விராஜ் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமான சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து போக்குவரத்தைத் தடுப்பதற்கு சிலர் முயற்சிப்பதனால் அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களத்தில் பணியாற்றும் அனைத்து நிரந்தர, ஒப்பந்த மற்றும் பதில் பணியாளர்கள் அனைவருடைய விடுமுறையும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் ஊடகச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது நிலவும் மோசமான காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள அனர்த்த சூழ்நிலையில் புகையிரத சேவையை ஆகக்கூடிய அளவில் வழங்குவதற்கு புகையிரத திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறான ஒரு சூழ்நிலையில் அரசாங்கத்தை பாதிக்கும் வகையில் இத்தகைய தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்வதை போக்குவரத்து அமைச்சு வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435