ரயில்வேயில் 1500 பேரை நிரந்தரமாக சேவையில் இணைக்குமாறு கோரிக்கை

2014-2015 ஆண்டுகளில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 1500 சாதாரண, மாற்று, தற்காலிக மற்றும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரமாக பணியில் அமர்த்துமாறு ரயில்வே தொழிற்சங்கங்க கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

நேற்று (09) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது ரயில்வே தொழிற்சங்கங்க கூட்டமைப்பு இதனை வலியுறுத்தியுள்ளது.

இதன்போது கருத்து தெரிவித்துள்ள அந்த கூட்டமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஜி.வித்தானனகே, இந்த பணியாளர்களுள் 99 வீதமானோர் கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களித்தனர்.

இந்த நிலையில், இந்த அரசாங்கம் எதிர்வரும் மார்ச் மாதம் 2ஆம் திகதி கலைக்கப்படுமாயின், அதற்கு முன்னதாக 1,500 ஊழியர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடுத்து, இந்த பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என ரயில்வே தொழிற்சங்கங்க கூட்டமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஜி.வித்தானனகே தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435