ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள், இயந்திர சாரதிகள் நிலைய அதிபர்கள் ஆகியோர் (29) ஆம் திகதி நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்ப்டவிருந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
27ஆம் திகதி இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் ஜனக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், ரயில்வே தொழிற்சங்கத்தினருக்கும் இடையில் 27ஆம் திகதி கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்தக் கலந்துரையாடலின் தீர்மானத்திற்கு அமையவே பணிப்புறக்கணிப்பை கைவிடுவதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் ஜனக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கும் ரயி;ல்;வே தொழிற்சங்கத்தினருக்கும் இடையிலான இரண்டாவது சந்திப்பு இதுவாகும்.
இதன்போது, ரயில்வே தொழிற்சங்கத்தினரின் பிரச்சினைகளைத் தீர்க்க தமக்கு இரண்டு மாதகால அவகாசம் தேவை என ஜனாதிபதி உறுதியளித்ததாவும், அவரின் பதிலில் நம்பிக்கை கொண்டு பணிப்புறக்கணிப்பு தீர்மானத்தைக் கைவிட்டதாகவும், ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் ஜனக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.