ரயில்வே ஊழியர்களின் வேலைநிறுத்தப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 12 நாட்களாகியுள்ள நிலையில் போராட்டத்தை ரயில்வே ஊழியர்கள் சங்கங்கள் இன்று (07) தீர்மானித்துள்ளன.
தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்த சம்பள ஆணைக்குழு அதிகாரிகளுக்கும் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்தையும் இணக்கப்பாட்டுடன் நிறைவடைந்ததையடுத்து தமது போராட்டத்தை கைவிட ரயில்வே தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து கடந்த 24ம் திகதி ரயில்வே சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள், நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் கண்காணிப்பு முகாமையாளர்கள் சங்கம் என்பன வேலைநிறுத்தப்போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்
தேர்தல் காலத்தில் போராட்டங்களில் ஈடுபட்டு பொது மக்களை அசௌகரியங்களுக்குட்படுத்த வேண்டாம் என்று தேர்தல் ஆணையாளர் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தநிலையில் பேச்சுவார்த்தைகளும் சுமூகமாக இடம்பெற்றதையடுத்து ரயிவே தொழிற்சங்கங்கள் தமது போராட்டத்தை கைவிட்டுள்ளது.
முன்னதாக நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ரயில்வே ஊழியர்கள் அனைவரும் தமது கடமையைக் கைவிட்டுச் சென்றவர்களாகக் கணிதப்படுவர் என ரயில்வே திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கமைய, அறிவிக்காமல் கடமைக்கு சமுகமளிக்காத அனைத்து உத்தியோகத்தர்களும் கடமையைக் கைவிட்டுச் சென்றதாக கருதப்படுவதுடன், அது தொடர்பான கடிதம் அவர்களுக்கு வழங்கப்படும் என்றும் ரயில்வே திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்ள்ளார்.
2,500 உத்தியோகத்தர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதால், இலட்சக்கணக்கான மக்கள் பெரும் அவல நிலையை எதிர்நோக்க வேண்டியுள்ளதுடன், ரயில்வே திணைக்களமும் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கவேண்டி உள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக ரயில் சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை காரணமாக அனைத்து பணியாளர்களின் விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே பொதுமுகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக அனைத்து பணியாளர்களும் உடனடியாக சேவைக்கு சமூகமளிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
போக்குவரத்து சேவைகள் அமைச்சின் செயலாளர் எல்.பீ.ஜயம்பதி, ரயில்வே பொது முகாமையாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
ரயில் சேவையை தடையின்றி முன்னெடுப்பதற்கு அவசியமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அதன் முன்னேற்ற நடவடிக்கைகளை ஜனாதிபதிக்கு அறிக்கையிடும் வகையில் தனக்கு அறியப்படுத்துமாறும், அந்த உத்தரவை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டியது, திணைக்களப் பிரதானி என்ற அடிப்படையில் ரயில் வே பொது முகாமையாளரின் பொறுப்பாகும் என்றும் அமைச்சின் செயலாளர் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ரயில்வே பொது முகாமையாளர் குறித்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
இவ்வாறான நிலையில், ரயில்வே ஊழியர்களின் வேலைநிறுத்தப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 12 நாட்களாகியுள்ள நிலையில் போராட்டத்தை ரயில்வே ஊழியர்கள் சங்கங்கள் இன்று (07) தீர்மானித்துள்ளன.