வங்கிக் கடன் தொடர்பில் ஆசிரியர் அதிபர்களுக்கான அறிவுறுத்தல்

அதிபர்கள், ஆசிரியர்கள் தாம் பெற்றுக்கொண்ட திணைக்களம் சார்ந்த கடன்கள், வங்கியூடான கடன்கள் எவற்றையும் இப்போதைக்குச் செலுத்தத் தேவையில்லை என இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அபாயகரமான சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு பொது மக்களும், அரசாங்க ஊழியர்களும் தமது திணைக்களங்களுக்கு ஊடாகவும், வங்கிகளுக்கு ஊடாகவும் பெற்றுக்கொண்ட கடன்கள் எதனையும் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட கால எல்லை வரை செலுத்தத் தேவையில்லை என்பது பொதுவான அறிவித்தலாக உள்ள நிலையில்,

அதிபர்கள், ஆசிரியர்கள் தாம் பெற்றுக்கொண்ட திணைக்களம் சார்ந்த கடன்கள், வங்கியூடான கடன்கள் எவற்றையும் இப்போதைக்குச் செலுத்தத் தேவையில்லை என்பதனை திணைக்களத்திற்கூடாகவும், வங்கிகளுக்கூடாகவும் உறுதிப்படுத்தியுள்ளோம். ஆகையால் உங்களது மாதாந்த முழு வேதனத்தையும் அப்படியே பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறு இல்லாமல் இந்த குறித்த இடர்க்காலங்களில் ஏதாவது அறவீடு செய்யப்படுமாக இருந்தால் இச்செய்தியோடு குறித்த நிதி நிறுவனங்களோடு தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

ஏதாவது இடர்ப்பாடுகள் இருப்பின் எம்மோடு தொடர்புகொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள் என இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கம் தனது முகப்புத்தகத்தில் தகவல் குறிப்பிட்டு தொடர்பு இலக்கங்கள் மற்றும் தொடர்புகொள்ளவேண்டி நபர்களின் பெயர்களையும் வழங்கியுள்ளது. பெயர்கள் வருமாறு,

தலைவர் .இரா.சச்சிதானந்தம் 0776179202
நிதிச் செயலாளர் .க.தேவநேசன் 0778693352
துணை நிதிச் செயலாளர் .கி.இந்திரன் 0779543956
வடக்கு மாகாணச் செயலாளர் .ஜெ.நிஷாகர் 0777291665
மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் செ.சிவநடேஸ் 0652056716
புத்தளம் செயலாளர் தெ.சுதர்சன் 0705965000
மலையகம் துணைத் தலைவர் திருமதி. சரஸ்வதி பாலசுப்ரமணியம். 0778820282
இலங்கை முழுவதும் பொதுச்செயலாளர் சரா.புவனேஸ்வரன் 0773126807

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள் (1)

  1. Kiritharan says:

    HNB bank il aravidukiralkal visarikkavim. From Kiritharan. (0752824230)

    (0)(0)

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435