வடக்கில் பெப்ரவரி நடுப்பகுதிக்குள் மேலும் 860 ஆசிரியர்கள் நியமனம்

வடமாகாணத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடுப்பகுதியளவில் 860 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது என்று வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் ரவீந்தரன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் சுமார் 70 ஆசிரியர்களுக்கு நியமனக்கடிதங்களை வழங்கிய நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், இது தவிர மேலும் இவ்வருட நிறைவுக்குள் ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர். கடந்த வருடம் வட மாகணத்திற்கு சிங்கள ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட போது விண்ணப்பங்கள் கோரப்பட்டமையை தாம் அறிந்திருக்கவில்லை என்று பலர் சுட்டிக்காட்டினர். அவ்விடயத்தை கருத்திற்கொள்ளுமாறு நாம மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவிடம் கோரியுள்ளோம்.

பொது மக்களின் வரியில் சம்பளம் பெறும் நாம் எமது சேவை வினைத்திறன் மிக்கதாகவும் விரைவாகவும் செய்யக்கூடியவர்களாக எம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். தமது சேவையை திறம்பட செய்ய மனநிலையில் மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இதனூடாக சிறந்த கல்வியை மாணவர்களுக்கு வழங்க முடியும்.

ஆசிரியர்களின் ஒழுக்கக்கோவை மற்றும் கடமையாற்றும் முறை என்பன பற்றிய 21 நாள் வதிவிடப் பயிற்சி நெறி நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படவுள்ளது. நியமனம் கிடைத்தவுடன் வீட்டுக்கருகில் உள்ள பாடசாலையிலேயே பணியாற்ற வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். கிடைக்கும் பாடசாலைகளில் வினைத்திறனுடன் செயற்படுங்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435