வடமாகாண பாடசாலைகளில் நிலவும் கணிதம் விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்ப பாடங்களுக்கான ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களை உள்ளீர்ப்பதற்கான நியமனங்கள் இன்று (10) வழங்கப்பட்டன.
இந்த நியமனம் வழங்கும் நிகழ்வு யாழ். இந்து கல்லூரியில் நடைபெற்றது.
வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு நியமனங்களை வழங்கி வைத்தார்.
219 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டது.
அதில் பௌதீகவியல் பாடத்திற்கு 16 பட்டதாரிகளுக்கும், இரசாயனவியல் பாடத்திற்கு 11 பட்டதாரிகளுக்கும், உயிரியல் பாடத்திற்கு 13 பட்டதாரிகளுக்கும், இணைந்த கணிதம் பாடத்திற்கு 10 பட்டதாரிகளுக்கும் நியமனம் வழங்கப்பட்டது.
மேலும், உயிரியல் தொழிநுட்பம் பாடத்திற்கு 15 பட்டதாரிகளுக்கும், பொறியியல் தொழிநுட்பம் பாடத்திற்கு 12 பட்டதாரிகளுக்கும், தொழிநுட்பத்திற்கான விஞ்ஞானம் பாடத்திற்கு 2 பட்டதாரிகளுக்கும் விஞ்ஞான பாடத்திற்கு 95 பட்டதாரிகளுக்கும், கணித பாடத்திற்கு 45 பட்டதாரிகளுக்குமாக தொத்தமாக 219 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.