வடக்கு அதிபர் நியமனத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடி

போட்டி பரீட்சையில் சித்தி பெற்ற 398 அதிபர்களுக்கும் நியமனம் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளபோதும் 90 அதிபர்களுக்கு மாத்திரமே நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் பார்க்கும்போது முதலமைச்சருடைய கட்டளையை மீறி நிர்வாகங்கள் செயற்படுகின்றனவா என ஆசிரியர் சங்க உப தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், வடக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் அலுவலகத்தில் தரம் மூன்று அதிபர்கள் சார்பான பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம். கல்வியமைச்சர் வெளியிட்ட சுற்று நிருபத்தின் படி கடமை நிறைவேற்று அதிபர்கள், தரம்பெற்ற அதிபர்கள் தொடர்பில் சில பிரச்சினைகள் காரணமாக 90 நியமனத்தை நிறுத்தி வைக்குமாறு குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கு பிறகு எவ்விதமான சுற்று நிருபங்களும் வராத நேரத்தில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, இந்நியமனமானது சட்டரீதியானது அல்ல.

நேர்முக தேர்வு நடைபெறுகின்ற போது வலிகாமம் கல்வி வலையத்தில் சில முறைகேடுகள் நடப்பதாக எமக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றன. மேலும் உப அதிபர் நியமனம், பதில் அதிபர் நியமனம் போன்றவற்றிற்கு விண்ணபிக்குமாறு செயலாளர் போதாத நிலையிலும் சில பத்திரிக்கைகளில் நியமனங்களுக்கான கோரிக்கைகள் பிரசுரிக்கப்பட்டது. பின்னர் இது தவறானது என இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியதற்கு அமைவாக இவ்விண்ணப்பம் இரத்து செய்யப்பட்டது.

ஆயினும் வலிகாமம் கல்வி வலய பணிப்பாளர் அவ் நியமனம் தொடர்பாக பல அசௌகரியமான செயற்பாடுகளில் ஈடுபட்டது. எமது சங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. ஒரே நேரத்தில் தரம் பெற்று பரீட்சைக்கு தோற்றியோருக்கு மீண்டும் ஒரு நேர்முக பரீட்சை தேவையில்லை. 398 அதிபர்களும் ஒரே தரத்தில் இருக்கிறார்கள். இந்த நேர்முக பரீட்சையானது சில பக்க சார்பான செயற்பாடுகளுக்கு கொண்டு செல்லுமென நாங்கள் முதலமைச்சருக்கு ஏற்கனவே கூறியிருந்தோம்.

அதனை சாதகமாக பரிசீலித்து நேர்முக தேர்வுகளை நிறுத்துமாறு முதலமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளபோதும் 90 அதிபர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இது எமக்கு முதலமைச்சருடைய கட்டளையை மீறி நிர்வாகங்கள் செயற்படுகின்றனவா என சந்தேகத்தை எழுப்பியுள்ளது என்றார்.

நன்றி- வழிகாட்டி

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435