வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலவும் தொண்டர் ஆசிரியர் நியமனங்கள் தொடர்பான பிரச்சினையை தீர்க்க அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வட மாகாணத்தில் 684 தொண்டர் ஆசிரியர் பரீட்சைகள் ஊடாக தெரிவுசெய்யப்பட்டுள்ளபோதும், அவரிகளில் 184 பேருக்கு மாத்திரமே நியமனங்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், பலரின் வேண்டுகோளுக்கு இணங்க, தெரிவுசெய்யப்பட்ட 684 பேருக்கும் ஓரேடியாக நியமனங்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதற்காக பிரதமரின் அலுவலகத்தின் ஊடாக அமைச்சரவைப்; பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் நிலவும் தொண்டர் ஆசிரியர்களின் பிரச்சினைகளை தீர்க்கவும் அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்;யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.