வடக்கு கிழக்கு பட்டதாரிக்கு நியமனம் வழங்க ஏன் தயக்கம்?

வடக்கு கிழக்கு பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்குவதற்கான நியமனத்தை மேற்கொள்ள கல்வியமைச்சு ஏன் தயக்கம் காட்டுகிறது என்று இலங்கை கல்வி நிருவாக அதிகாரிகள் சங்கம் கேள்வியெழுப்பியுள்ளது.

கடந்த 20 நாட்களுக்கும் மேலாக நிரந்த அரச நியமனங்கள் கோரி வடக்கு கிழக்கு பட்டதாரிகள் தொடர்ச்சியான சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த போதிலும் இதுவரை அவர்களுக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்க கல்வியமைச்சு தீர்மானம் எடுக்க தயக்கம் காட்டுகிறது.

அரசியல்வாதிகளும் தொழிற்சங்க உறுப்பினர்களும் அன்றாடம் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அன்றாடம் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.

பல வருடங்கள் கஷ்டப்பட்டு பல்கலைக்கழகத்தில் கற்று பட்டம் பெற்றதுதான் பட்டதாரிகள் செய்த தவறா? இலங்கையில் கல்வித்துறை வாய்ப்பென்பது க.பொ.த உயர்தரத்தில் சித்தியடைந்தவுடன் தொண்டர் அடிப்படையில் நியமனம் வழங்க அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்படுகிறது. இதற்கு போட்டிப்பரீட்சை நடத்தப்படுவதில்லை. ஆனால் மாகாணசபை 13ம் திருத்தச்சட்டத்திற்கமைய பட்டதாரிகளுக்கும் டிப்ளோமாதாரிகளுக்கும் நியமனம் வழங்குவதற்கான அதிகாரத்தை மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறிருக்கையில் பட்டதாரிகளுக்கு நேர்முகப்பரீட்சைக்கு முன்னர் போட்டிப்பரீட்சை வைப்பது எந்தவகையில் நியாயமாகும்?

இலங்கை ஆசிரியர் சேவை புதிய சேவை பிரமாணக்குறிப்பிற்கமைய ஆசிரியர் நியமனம் தொடர்பாக ஆசிரியர் நியமனம் தொடர்பாக போட்டிப்பரீட்சை நடாத்தப்பட வேண்டும் என கூறப்பட்ட போதிலும் இதற்கு மாறாக தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க கல்வியமைச்சு முற்படும் நிலையில் வடக்கு கிழக்கு மாகாணசபைகள் போட்டிப்பரீட்சையினூடாக நியமனம் வழங்குவோம் என்பது எந்தவகையில் நியாயமாகும்.

எனவே, பட்டதாரிகள் மற்றும் அவர்களது கல்வி என்பவற்றுக்கு கௌரவம் வழங்கும் வகையில் அவர்களுக்கான நியமனங்களை தாமதிக்காமல் வழங்க வேண்டும் என்று கல்வி நிருவாக சேவை அதிகாரிகள் சங்கம் மேலும் கோரியுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435