வடக்கு பொலிஸ் சேவையில் 474 வெற்றிடங்கள்

வட மாகாண பொலிஸ் சேவையில் பாரிய வெற்றிடங்கள் நிலவுகின்றபோதிலும், இளைஞர்கள் பொலிஸ் சேவையில் இணைய முன்வருவதில்லை என முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னரே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வட மாகாண பொலிஸ் சேவையில் 474 வெற்றிடங்கள் நிலவுவதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் தமது கவனத்துக்கு கொண்டுவந்ததாக முதலமைச்சர் கூறியுள்ளார்.

எனவே, குறித்த ஆளணி பற்றாக்குறைக்கு ஆட்களை இணைக்க வேண்டிய தேவை உள்ளதன் காரணமாக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இந்த நிலையில், பொலிஸ் கான்ஸ்டபில் சேவைக்கு விண்ணப்பங்களை பெற்றுச் சென்ற 20 பேரில் 2 பேர் மாத்திரமே விண்ணப்பித்ததாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் உப பொலிஸ் அதிகாரி பதவி வெற்றிடத்துக்கு 18 பேர் விண்ணப்பங்களைப் பெற்றுச்சென்றபோதும், ஒருவர் மாத்திரமே விண்ணப்பித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

வடக்கில் தமிழ்மொழி தெரிந்த பொலிஸாரின் குறைப்பாடு நிலவுகின்றமை குறித்து பொலிஸ் அதிகாரிகள் தமது கவனத்துக்கு கொண்டுவந்ததாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இளைஞர்கள் பொலிஸ் சேவையில் இணைவதற்கு விருப்பம் கொள்வதாக தெரியவில்லை. ஆனால், பொலிஸ் சேவையில் இளைஞர்கள் இணைய வேண்டும்; என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435