வடபிராந்திய இ.போ.ச ஊழியர்கள் உணவு தவிர்ப்பு போராட்டம்

இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய தொழிற்சங்க ஊழியர்கள் இன்று (04) முதல் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய இணைந்த தொழிற்சங்க செயலாளர் அருளானந்தம் அருள்பிரகாஸ் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் வட மாகாண போக்குவரத்து அமைச்சரான முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடன் நேற்று முற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் போராட்டத்தை கைவிடுவதாக அறிவிக்கப்பட்டது.

இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பி.எச்.ஆர்.டி.சந்ரசிறி இதனை அறிவித்திருந்தார்.

ஆனால் இந்த தீர்மானத்தில் தங்களுக்கு உடன்பாடில்லை என்று தெரிவித்துள்ள இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய இணைந்த தொழிற்சங்க செயலாளர் அருளானந்தம் அருள்பிரகாஸ், தங்களின் போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபையின் தனித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும், வவுனியா புதிய பேரூந்து நிலையம் இரண்டாக பிரிக்கப்பட்டு அரச மற்றும் தனியார் பேரூந்துகளுக்கு தனித்தனியாக நிர்வாகம் அமைக்கப்பட்டல் வேண்டும், இந்த கோரிக்கைகளுக்கு எழுத்து மூலம் உறுதிமொழி தரப்பட வேண்டும்.

இவை மூன்றுமே எமது கோரிக்கைகள் இவற்றை நிறைவேற்றினால் எமது தொடர் பணிப்புறக்கணிபை கைவிட தயார் எனவும் நேற்று அந்த சங்கத்தினர் தெரிவித்தி;ருந்தனர்.

எனினும், தமது கோரிக்கைகளுக்கு எழுத்துமூலமான உறுதிமொழி கிடைக்காத காரணத்தால், உணவு தவிர்ப்பு போராட்டத்தில் இன்று முதல் ஈடுபடுவதாக இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய இணைந்த தொழிற்சங்க செயலாளர் அருளானந்தம் அருள்பிரகாஸ் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435