வடமாகாண பட்டதாரிகளின் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்படும் – பிரதமர்

வடமாகாண பட்டதாரிகளின் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார்.

பாகுபாடு காட்டாமல் தேர்தலுக்கு முன்னர் அனைத்துப் பட்டதாரிகளுக்கும் நியமனத்தை வழங்க வேண்டுமென வடக்கு மாகாண பட்டதாரிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பட்டதாரி நியமனங்கள் அனைத்து பட்டதாரிகளுக்கும் வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாண மாவட்ட செயலக கூட்டத்தில் இன்று கலந்துகொண்டிருந்தபோது, வட மாகாண பட்டதாரிகள் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு அருகில் கூடியிருந்தனர்.

இந்தநிலையில் பட்டதாரிகள் சங்க உறுப்பினர்கள் சிலரை அழைத்து பிரதமர் சில நிமிடங்கள் பேச்சு நடத்தியுள்ளார்;. இதன்போது மகஜர் ஒன்றும் பிரதமரிடம் கையளிக்கப்பட்டது.

இதையடுத்து குறித்த சந்திப்பு தொடர்பாக கருத்துத் தெரிவித்த வட மாகாண பட்டதாரிகள் சங்கத் தலைவர் ஜசிந்தன் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில்,

வட மாகாண பட்டதாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் மகஜர் ஒன்றின் ஊடாக பிரதமருக்கு அறியப்படுத்தப்பட்டுள்ளது. இதன்போது பதிலளித்த பிரதமர், குறித்த விடயம் தொடர்பில் தான் கவனம் செலுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

தற்போது வழங்கப்பட்டுள்ள பட்டதாரிகள் நியமனத்தில், வெளிவாரி, உள்வாரி என்ற பாகுபாடின்றி, அனைவருக்குமான தொழிலாவாய்ப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017, 2018ஆம் ஆண்டுகளில் பதிவுசெய்து, நேர்முகத்தேர்வுக்கு உட்படுத்தப்படாத வெளிவாரி பட்டதாரிகள் அனைவரையும் உடனடியாக பதிவுசெய்து, நேர்முகத்தேர்வுக்கு உட்படுத்தி, அவர்களுக்கான நியமனத்தை உறுதிப்படுத்த வேண்டும்.

அத்துடன், நேர்முகத்தேர்வுக்கு உட்படுத்த 2017ஆம் ஆண்டுக்கான வெளிவாரி பட்டதாரிகளுக்கும், 2012 ஆம் ஆண்டுமுதல் தற்போதுவரையான வெளிவாரிப் பட்டதாரிகளுக்கு நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்குள்ளேயே தொழில்வாய்ப்புக்களை உறுதிப்படுத்த வேண்டும் என மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.

அந்த விடயம் தொடர்பில், தான் கவனம் செலுத்துவதாக பிரதமர் உறுதிமொழி தந்துள்ளார் என வட மாகாண பட்டதாரிகள் சங்கத் தலைவர் ஜசிந்தன் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435