வட மத்திய மாகாணத்தில் 1192 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாகாண சுயாதீன அரச சேவை ஆணைக்குழுவின் செயலாளர் எச்.எம் திலக்க பண்டார தெரிவித்துள்ளார்.
மாகாண கல்வியமைச்சினால் கோரப்பட்டிருந்த போட்டிப்பரீட்சைக்கு விண்ணப்பங்களை அனுப்பி, அதில் தேர்ச்சி பெற்று நேர்முகத்தேர்வில் கலந்துகொண்டு தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளுக்கே இந்நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.
திறந்த போட்டிப்பரீட்சையாக அறிவிக்கப்பட்ட போதிலும் வட மத்திய மாகாணத்தின் அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பட்டதாரிகளுக்கே முன்னுரிமை வழங்கப்படவுள்ளதாக செயலாளர் சுட்டிக்காட்டினார்.
முக்கிய பாடங்களுக்கு போதியளவு பட்டதாரிகள் மாகாணத்துக்குள் இல்லாத பட்சத்தில் வௌிமாவட்டத்தினருக்கு வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.