வட மாகாணத்தில் மொத்தம் 6 ஆயிரத்து 338 வெற்றிடங்கள் இருப்பதாகத் தெரியவருகின்றது. அவற்றுள் மத்திய அரசினால் நிரப்பப்பட வேண்டிய வெற்றிடங்கள் 3 ஆயிரத்து 329. மாகாண அரசினால் நிரப்பப்பட வேண்டியவை 3009 என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இந்த வெற்றிடங்கள் காலத்துக்குக் காலம் ஏற்படுகின்றன. இளைப்பாறல்கள், இடமாற்றங்கள், பதவி விலகல்கள், இறப்புக்கள் எனப் பல காரணங்களால் இந்த வெற்றிடங்கள் ஏற்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட தினத்தில் வெற்றிடங்கள் உருவாவதில்லை. நாளாந்தம் இவை மாறிக்கொண்டேயிருப்பன.
ஒவ்வொரு சேவையிலும் கணிசமான அளவு வெற்றிடங்கள் ஏற்பட்ட பின்னரே சேவைப் பிரமாணக் குறிப்பின் பிரகாரம் ஆட்சேர்ப்புச் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பல வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டும் தகைமையுடையோர் முன்னிலையாகாத சந்தர்ப்பங்கள் உண்டு. உதாரணத்திற்கு மொழிபெயர்ப்பாளர்களைக் குறிப்பிடலாம். மேசன்மார்கள், குழாய் பழுது பார்ப்பவர்கள், பம்புகளை இயக்குபவர்கள், மரவேலை செய்வோர், தையல்க்காரர்கள் எனப் பலரின் வெற்றிடங்கள் கவனத்திற்கு வந்துள்ளன. எனினும் காலத்திற்குக் காலம் வெற்றிடங்கள் நிரப்பப்பட்டுக் கொண்டே உள்ளன.
உதாரணத்திற்கு நேற்றைய தினம் நாம் 110 முகாமைத்துவ உதவியாளர்களுக்கு நியமனங்கள் கையளித்தோம். ஒவ்வொரு வருடமும் இவ்வாறு வெற்றிடங்கள் நிரப்பப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.
தற்போது எம்மால் நிரப்பப்பட வேண்டியவை 3009. ஆனால் புதிதாக நேற்று நியமனம் கொடுக்கப்பட்டவர்களும் அந்தத் தொகையினுள் அடங்குகின்றனர்.
தவணைக்குத் தவணை நாம் கொடுத்துவந்து கொண்டிருக்கின்ற நியமனங்கள் பற்றிய முழு விபரங்களையும் கோரியுள்ளேன். அவை கிடைத்ததும் உங்களுக்குத் தெரியப்படுத்துவேன்.
மாகாணசபையின் நிர்வாகத்தில் இருக்கும் பதவிகள் அனைத்தினது தொகை 40422. இவ்வளவு ஆளணியும் மத்திய அரசினாலும் மாகாண அரசினாலும் நிரப்பப்படுகின்றன. மாகாண அரசினால் நிரப்பப்படவேண்டிய ஆளணியில் 31.07.2018 அன்று வெற்றிடமாக நிரப்பப்படவேண்டிய ஆளணியினர் 3009. இது 7.4மூ (3009ஃ40422ழூ100ஸ்ரீ 7.4) ஆகும்.