வட மாகாண தொண்டர் ஆசிரியர்கள் 425 பேருக்கு இம்மாதம் 22ம் திகதி நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக முதலமைச்சர் அலுவலகம் அறிவித்துள்ளது.
யுத்த காலங்களில் நிலவிய ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் பணியாற்றிய தொண்டர் ஆசிரியர்கள் 790 பேருக்கு இரண்டு கட்டமாக நடத்தப்பட்ட நேர்முகத்தேர்வின் மூலம் தெரிவு செய்யப்பட்ட425 பேருக்கே இந்நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.
வடக்கு மாகாணத்தில் தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றியவர்கள் கடந்த கால நியமனங்களின் போது அரசியல்ரீதியாக பழிவாங்கப்பட்ட நிலையிலேயே நேர்முகத்தேர்வு நடத்தபட்டு நியமனங்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. இதேவேளை நேர்முகத்தேர்வுக்கு தோற்றிய அனைவருக்கும் நியமனம் வழங்கவேண்டும் என்று முதலமைச்சரிடம் கோரியுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.