வட மாகாண பட்டதாரிகளுக்கு அவசர கோரிக்கை

முப்பத்தைந்து வயதுக்கும் மேற்பட்ட வட மாகாண பட்டதாரிகளை மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாக இன்று (9) முற்பகல் 9.30 மணிக்கு கூடுமாறு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் கோரியுள்ளது.

தொடர் கவனயீர்ப்பு போராட்டத்திற்கமைய அபிவிருத்தி உத்தியோகத்தர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு வேலையற்ற பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்ட போதிலும் விண்ணப்பங்களை அனுப்புவதற்கான வயதெல்லை 35ஆக குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஆளுநரிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்படவுள்ளதாக வட மாகாண பட்டதாரிகள் சங்கம் கூறியுள்ளது.

அதற்கமைய நாளை விண்ணப்பங்களை அனுப்புபவர்களுக்கான வயதெல்லை 45 ஆக அதிகரிக்கப்படவேண்டும் என்றும் ஆளுநரிடம் மகஜர் கையளிக்கப்படவுள்ளது.

இதனைக் கவனத்திற்கொண்டு வட மாகாண வேலையற்ற பட்டதாரிகளை உடனடியாக ஆளுநர் அலுவலகம் முன்பாக கூடுமாறு கோரப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435