வட மாகாண மீனவ சம்மேளங்கள் ஜனாதிபதிக்கு மனு

இந்திய இலங்கை கூட்டுப் படையினரின் கண்காணிப்பு உள்ளிட்ட 7 முக்கிய கோரிக்கைகளின் அடிப்படையில் இந்தியாவுடன் மீன்பிடி சார்ந்த பேச்சுவார்த்தைகளை நடத்துமாறு கோரியும் வடமாகாண மீனவ சம்மேளனங்கள் இணைந்து ஜனாதிபதிக்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி இந்தியா செல்ல உள்ள நிலையில், இந்திய அரசாங்கத்திடமும் தமிழக அரசாங்கத்திடமும் தமது பிரச்சினைகள் குறித்து கலந்துரையாட வேண்டும் என்று வலியுறுத்தியே இந்த மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நேற்று (12) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட யாழ்ப்பாண மாவட்ட மீனவ சம்மேளனத் தலைவர் சுப்பிரமணியம் இதனைத் தெரிவித்தார்.

அதேவேளை இலங்கை கடற்றொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பில் புதிய சட்டம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என மன்னார் மாவட்ட மீனவ சம்மேளனத் தலைவர் ஆலம் கோரிக்கை விடுத்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

வேலைத்தளம்/ இண்டோஸ்ரீ

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435