வலய மட்டத்தில் ஆசிரியர் குழாம்
வருடாந்தம் பத்தாயிரம் ஆசிரியைகள் பிரசவ விடுமுறையில் செல்வது உட்பட்ட காரணங்களினால் ஏற்படும் பிரச்சினைக்கு தீர்வாக வலய மட்டத்தில் ஆசிரியர் குழாம்களை அமைப்பது குறித்து கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கவனம் செலுத்தியுள்ளார்.
கல்வி அமைச்சில் நேற்று (23) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோது கல்வி அமைச்சர் மேற்கண்டவிடயத்தை தெரிவித்துள்ளார்.
ஆசிரியைகளில் சுமார் 10 ஆயிரம் பேர் வருடாந்தம் பிரசவ விடுமுறையில் செல்கின்றனர். இது தவிர வேறு காரணங்களுக்கும் ஆசிரியர்களினால் விடுமுறைகள் பெறப்படுகின்றன.
இதனால் மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளுக்கு ஏற்படும் இடையூறினை தவிர்ப்பதற்காக பாடசாலைகளில் சேவையில் ஈடுபடுத்துவதற்காக வலய மட்டத்தில் ஆசிரியர் குழாங்களை உருவாக்க கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்;.