புதிதாக வழங்கப்படவிருந்த 7000 அரச நியமனங்கள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக திரைசேரி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் ஆரம்பித்த எண்டர்ப்பிரைஸ் ஶ்ரீலங்கா திட்டம் மற்றும் அரச வங்கிகளினூடாக வழங்கப்பட்ட நிவாரணத்துடன் கூடிய 11 கடன் திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன என தேசிய ஆங்கில நாளிதழான சண்டே டைம்ஸ்ஸை மேற்கோள் காட்டி லங்காதீப பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளன.
மேலும் கடனுக்கான விண்ணப்பங்களை கவனத்திற்கொள்ளல், மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்தல் என்பனவும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அரச வங்கிகள் தெரிவித்துள்ளன.
மேலும் திட்ட அதிகாரிகள், முகாமைத்துவ சேவை ஆளணி, அபிவிருத்தி அதிகாரிகள் பதவி என்பவற்றுக்கு புதிய நியமனங்கள் வழங்கவேண்டாம் என்று திரைசேரி அரச நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
இதேவேளை, புதிய நியமனங்கள் வழங்கப்படுவதை உடனடியாக நிறுத்துமாறு அமைச்சின் செயலாளர்கள், மாகாணசபை பிரதானிகள், மாவட்டச் செயலாளர்கள், திணைக்கள பிரதானிகள், கூட்டுத்தாபனங்களின் தலைவர்கள் மற்றும் சட்டரீதியான அதிகாரிகள் கொண்ட அதிகாரிகள் சபை என்பவற்றுக்கு குறித்த விடயம் தொடர்பில் சுற்றுநிருபத்தினூடாக குறித்த விடயம் தொடர்பில் தௌிவுபடுத்தப்பட்டுள்ளது.
மீள் அறிவித்தல் வரையில் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவுக்கு மற்றொரு சுற்றுநிரூபத்தினூடாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பரீட்சை மற்றும் நேர்முகத்தேர்வினூடாக தெரிவு செய்யப்பட்ட நூற்றுக்கணக்கானவர்களி்ன் நிலை கேள்விக்குறியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைக்காவல் அதிகாரி, சிறைச்சாலை அதிகாரி ஆகிய பதவிகளுக்கு வழங்கப்பட்ட சுமார் 1300 புதிய நியமனங்கள் இடைநிறுத்தும் நடவடிக்கையை சிறைச்சாலை திணைக்களம் மேற்கொண்டுள்ளது. தேர்தலுக்கு முன்னர் குறித்த வெற்றிடங்களுக்கான விண்ணப்பஙகள் கோரப்பட்டிருந்தன.
பொது நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு செயல்பாடுகளை இடைநிறுத்துமாறு திரைசேரி மற்றுமொரு சுற்றுநிரூபத்தை அனுப்பியுள்ளது. அரச அபிவிருத்தியை நோக்காக கொண்டு தௌிவான நோக்கங்கள் எதுவுமின்றி பொது நிறுவனங்களின் அனுசரணை, நன்கொடைகள் மற்றும் விளம்பரம் உட்பட பல சமூக பொறுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தொடர்ந்தும் சமூக பொறுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமாயின், ஆலோசனைகள் பின்பற்றப்படாவிடின் பிரதான கணக்காளர், முகாமைத்துவசபை அங்கத்தவர்கள் மற்றும் பிரதான நிருவக அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அச்சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அரச அதிகாரிகளின் வௌிநாட்டுப் பயணங்கள் ரத்து செய்யப்பட்ட சுற்றுநிரூபம் ஒன்று அண்மையில் சுற்றுநிரூபம் வௌியிடப்பட்டிருந்த நிலையில் நிருவாக சட்டதிட்டங்கள் கடுமையாக பின்பற்றப்படவேண்டும் என்று பின்னர் அதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கமைய, அரச அதிகாரிகளின் வௌிநாட்டுப் பயணங்கள் தொடர்பான அனைத்து ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் உரிய திணைக்களங்களின் அனுமதி பெற்ற பின்னர் உயர் கல்வி அல்லது கல்விப் பயணங்களை மேற்கொள்ள முடியும்.
இதேவேளை, கடந்த அரசாங்கத்தின் கம்பெரலிய கிராம அபிவிருத்தித் திட்டம், ஶ்ரீலங்கா எண்டர்பிரைஸ் ஆகிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் மீண்டும் ஆராய்ந்துப் பார்க்கப்படவுள்ளதாக திரைச்சேரி அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இத்திட்டங்களுக்காக ஐக்கிய தேசிய முன்னணி 48.81 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம் – லங்காதீப