விடுதலை கோரி இந்திய மீனவர்கள் உண்ணாவிரதம்

இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் 31 பேர் ​நேற்று (13) முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டள்ள இராமேஸ்வரம், புதுக்கோட்டை, தங்கச்சிமடம், தேசாபட்டினம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களே இந்த உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கை கடற்படையினரால் தாம் கைது செய்யப்பட்டு இரண்டு மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நிலையில் தம்மை விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்தே இந்த உண்ணாவிரத போரர்டத்தை மேற்கொள்வதாக இந்திய மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், படற்படையினரால் கைப்பற்றப்பட்ட தமது படகுகளை விடுவிக்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமது இந்த உண்ணாவிரத போராட்டம் தொடர்பாக யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதுவருக்கு தாம் அறிவித்துள்ளதாகவும் இந்திய மீனவர்கள் தெரிவித்துள்ள

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435