உருளைக்கிழங்கு, பெரியவெங்காயம், நெல், சோளம், சோயா, மிளகாய் ஆகிய ஆறு பயிர் செய்கைகள் காப்புறுதியில் உள்ளீர்க்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்;ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை (31) கரவெட்டி கமநல சேவை நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வில், விவசாயத்துறை பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதனின் கரவெட்டி கமநல சேவை நிலையத்திற்குரிய பாதிக்கப்பட்ட 172 விவசாய செய்கையாளர்களுக்கு, விவசாய காப்புறுதி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் வடமாகணத்தில் முதலாவதாக யாழ் மாவட்ட கரவெட்டி பிரதேசத்தில் விவசாய காப்புறுதி வழங்கப்பட்டது.
உருளைக்கிழங்கு, பெரியவெங்காயம், நெல், சோளம், சோயா, மிளகாய் ஆகிய ஆறு பயிர் செய்கைகள் காப்புறுதியில் உள்ளீர்க்கப்பட்டுள்ளது.
ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக ரூபா ஒரு இலட்சம் வரை இழப்பீடு பெற முடியும் என்பதோடு, இத்திட்டத்திற்காக ரூபா 5,228 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.