வீடமைப்பு அதிகாரசபையில் மேலதிகமாக 2300 ஊழியர்கள்

எவ்வித தொழில்நிலைப்பிரிவு, பயிற்சிகள் இன்றி பெரும் எண்ணிக்கையான பட்டதாரிகளும் பட்டதாரிகளற்றவர்களுக்கு தேசிய வீடமைப்பு அதிகாரசபையில் இணைக்கப்பட்டுள்ளனர் என்று ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தொழில்நிலைப்பிரிவின் அனுமதியின்றி சுமார் 2,300 பேர் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியளித்த மனிதவளப்பிரிவின் மேலதிக முகாமையாளர் லலித் எதிரிசிங்க, நியமனம் குறித்த உத்தரவு மின்னஞ்சல் மூலமாக உத்தரவு கிடைத்ததாகவும் பொது நிர்வாக சுற்றறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றவில்லை என்றும் அவர் ஒப்புக்கொண்டார்.

கடந்த 2018ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 32 பேர் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டதாகவும் அவர்களுக்கான நியமனக்கடிதங்களை வழங்குமாறு உத்தரவிட்டு ஜனவரி நடுப்பகுதியில் தமக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டதாகவும் மறுநாள் நியமனக்கடிதங்களை வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாஸ கையளித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மற்போக்கு தொழிற்சங்கம் கடந்த 2019ம் திகதி ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு இணைத்து பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளது.

ஆணைக்குழு முன்னிலையில் இதற்கு முன்னர் சாட்சியமளித்த முன்னாள் வீடமைப்பு அதிகாரசபையின் முன்னாள் நிர்வாக அதிகாரி எல்.எச்.டி. பிரியா பெரேரா, ஆணைக்குழுவில் மேலதிகமாக 2300 ஊழியர்கள் உள்ளனர் என்றும் அவர்கிளல் 95 வீதமானவர்கள் அம்பாந்தோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் அம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு 77 ஊழியர்கள் மட்டுமே தேவையாக உள்ள நிலையில் தற்போது 1400 பேர் உள்ளனர் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம்- தி ஐலண்ட்

.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435