வீடுகளை விட்டு வௌியேற வேண்டாம் – அரசு அறிவுறுத்தல்

கொரோனா தொற்றுக்குள்ளாகிய ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் ஏனைய அனைத்து ஊழியர்களும் அவர்களுடைய குடும்பத்தினரும் தமது வீடுகளை விட்டு வௌியேற வேண்டாம் என்றும் வீடுகளிலேயே சுயதனிமைப்படுத்தலில் ஈடுபடுமாறும் அரசாங்கம் அறிவித்துள்ளது என அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள், நாட்டின் எந்த பிரதேசத்தில் இருந்தாலும், தத்தமது வீடுகளில் இருந்து வெளியேற வேண்டாம் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது கொரோனா தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்டுள்ள நபர்களின் குடும்ப உறுப்பினர்களை தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, குறித்த நபர்கள், தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு செல்வதற்குத் தயாராக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவுறுத்தல்களை குறித்த குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கையும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435