வெலிக்கடை சிறை கைதிக்கு கொவிட் 19 உறுதி

வௌிக்கடை சிறைக் கைதி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

குறித்த கைதி கந்தக்காடு போதைப்பொருள் பாவனை புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து கடந்த மாதம் ஜூன் 27ம் திகதி வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்த புனர்வாழ்வு பெற்று வந்த 474 மற்றும் ஊழியர்கள் 131 பேர் தனிமைப்படுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலன்னறுவை பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் சரத் ஜயசிங்க இன்று (07) தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த நபர் பொலன்னறுவை சிறைச்சாலையூடாக வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டமையினால் பொலன்னறுவை சிறைச்சாலைக் கைதிகளையும் அதிகாரிகளையும் தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தனிமைப்படுத்தலுக்காக வேறு இடங்களுக்கு குறித்த நபர்கள் அழைத்துச் செல்லப்பட மாட்டார்கள். அவர்கள் தற்போது இருக்கும் இடங்களிலேயே தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று தெரிவித்த டொக்டர் சரத் ஜயசிங்க, குறித்த அனைவருக்கும் PCR பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது என்றும் தெரிவித்தார்.

மூலம் – லங்காதீப

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435