வெளிநாடுகளில் பணிபுரிபவர்களும் வாக்குரிமையை அனுபவிப்பதற்கான விசேட வேலைத்திட்டத்தை தயார்படுத்துவதற்கான காலம் ஏற்பட்டுள்ளதாக கஃபே அமைப்பு தெரிவவித்துள்ளது.
கஃபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த இலட்சக்கணக்கான வாக்காளர்கள் வெளிநாடுகளில் பணிபுரிகின்ற நிலையில், தேர்தல் காலங்களில் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் அவர்களுக்கு இல்லாமல் போகின்றதை அவதானிக்க கூடியவாறுள்ளது.
நாட்டின் பொருளாதார அபிவிருத்தியில் பாரிய பங்களிப்பை செலுத்திவரும் அந்த வாக்காளர்களுக்கு வாக்குரிமை இல்லாமலிருப்பது பாரதூரமான விடயமாக உள்ளது.
வெளிநாடுகளில் பணிபுரிபவர்களில், பொருளாதாரத்தில் நல்ல நிலையில் உள்ளவர்கள் மாத்திரம் தேர்தலுக்காக இலங்கைக்கு வருகை தருகன்றனர்.
அந்த நிலையில், அவர்கள் பணிபுரியும் நாட்டிலேயே உயர்ஸ்தானிகராலயத்தினூடாக வாக்களிக்கும் சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும் என கஃபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன் தெரிவித்துள்ளார்.