மாணவருக்கு அநீதி இழைக்கப்படாது – ஜனாதிபதி

வெளிவாரி பட்டப்படிப்பை மேற்கொள்ள பதிவு செய்யும் மாணவர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துவது தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து ஆராய்வதற்கான விசேட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதிக்கும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கும் இடையில் நேற்று (22) இடம்பெற்றுள்ளது.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் வழங்கப்பட்ட விடயங்களை கருத்திற்கொண்ட ஜனாதிபதி கல்விக்காக அரசாங்கம் வழங்கியுள்ள எவ்வித சலுகைகளையும் இல்லாமல் செய்வதில்லை என்று உறுதியளித்துள்ளார்.

வெளிவாரி பட்டப்படிப்புக்காக பதியும் மாணவர்களின் எண்ணிக்ககையை மட்டுப்படுத்தும் விடயத்தில் மாணவர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எதிர்வரும் இருவார காலத்தில் மேற்கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி இதன் போது தெரிவித்தார்.

மேலும் திறந்த பல்கலைக்கழக கல்வியை மேலும் பலப்படுத்தவும் வெளிவாரி பட்டப்படிப்பை மேற்கொள்ள நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கவும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டிருந்தது.

இக்கலந்துரையாடலில் அமைச்சர் லஷ்மன் கிரியெல்ல, இராஜாங்க அமைச்சர் மொஹான் லால் கிரேரோ, ஜனாதிபதி காரியாலய பொது தொடர்பு பிரவின் பணிப்பாளர் நாயகம் சாந்த பண்டார, பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி மொஹான் டி சில்வா மற்றும் பல்கலைக்கழக பிரதிநிதிகள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435